Sunday 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 16

Rate this posting:
{[['']]}

அப்பாவின் பரிசோதனை

அன்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள். தன் வீட்டுத்; தோட்டத்தில் உள்ள கதிரையில் அமர்ந்தவாறு எழுபது வயதான சுந்தரம் தோட்டத்தில பூத்திருந்த பல வர்ண மலர்களை இரசித்தபடி இருந்தார். அவருடைய முப்பது வயது மகள் மேகலா, படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் இருப்பவள். அவளும் அவர் கூடவே இருந்தாள்.;.

காகம் ஒன்று பறந்து வந்து தோட்டத்தில் துணிகள் உலரப்பேர்டும் கயிற்றில் அமர்ந்தது. தானியங்களை உண்ண முன்பு கா கா  என்று கரையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து  இன்னும் இரு காகங்கள் எங்கிருந்தோ பறந்து வந்து துணிகள் உலரப் போட்ட கொடியில் அமர்ந்தன. காகங்களின் ஒற்றுமையைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். முதலில் வந்த  காகம் உலரப்போட்ட துணிமேல் எச்சம் போட்டது. அதைப் பார்த்த சுந்தரம்
மேகலா இதென்ன”? மகளிடம் கேட்டார்.  

காகம் அப்பா.இருவார்த்தைகளில் பதில் சொன்னாள்.

சில வினாடிகளுக்குப் பின் திரும்பவும் மேலாவிடம் சுந்தரம் அதே கேள்வியைக் கேட்டார்.

இப்பத்தானே அப்பா சொன்னனான் காகம் எண்டுமேகலா பதில் அளித்தாள்.; சில வினாடிகளுக்கு பின் திரும்பவும் அதே கேள்வியை மகளிடம் மூன்றாம் தடவை சுந்தரம் கேட்டார்.

மேகலா பொறுமையை இழந்தாள்.

இதற்கு முன் இதே கேள்வியை இரண்டு தடவை கேட்டியள். இப்போது திரும்பவும் சொல்லுகிறன் காகம் காகம் காகம் என்று மூன்று தடவை உரக்கச் சொன்னாள் மேகலா.

சில வினாடிகளுக்குப் பின் சுந்தரம் திரும்பவும் அதே  கேள்வியை மேகலாவிடம் நாலாம் தடவை கேட்டார்.

இம்முறை மேகலாவின் பொறுமை எல்லையைத் தாண்டிவிட்டது.

நான் அது காகம் என்று சொன்ன பிறகும், அப்பா எத்தனை தடவை அதே கேள்வியை திருப்பித் திருப்பி கேட்கிறீர்கள்;. உங்களுக்கு நான் சொன்ன பதில் விளங்கவில்லையா? திரும்பவும் கடைசியாகச் சொல்லுகிறன் அது காகம் எண்டு”,. என்று சத்தம் போட்டு ; கோபத்தோடு உரத்த குரலில்  சொன்னாள்.
மேகலாவை பார்த்து புன்னகையித்து, எழும்பி வீட்டுக்குள் போனார் சுநதரம். மேகலாவுக்கோ நிம்மதியாக இருந்தது.

சில நிமிடங்களுக்கு பின் சுந்தரம்; கையில் ஒரு பழைய டையரியோடு திரம்பவும் தோட்டத்துக்கு வந்தார்.. சுந்தரத்துக்கு தன் திருமணத்துக்கு முன்பு இருந்தே தினமும் டயரி எழுதும் பழக்கம் இருந்தது. தனது பழைய டயரிகள் எல்லாவற்றையும் தன் அலமாhரிக்குள் பவுத்திரமாக வைத்திருந்தார்.
என்னப்பா கையில்மேகலா கேட்டாள்.

நீ மூன்று வயதாக இருந்த வருடம் நான் எழுதிய தின டயரி

அதை இப்ப எதற்காகக் கொண்டு வந்தனீங்கள்

கோஞ்சம் பொறுகொண்டு வந்த டயரியின் தினப் பக்கங்களைப் புரட்டினார்
தான் தேடியத் தினப் பக்கத்தைக் கண்டு பிடித்து அதில் தன் கையால் எழுதியிருந்த குறிப்பை வாசித்துவிட்டு மேகலாவிடம் கொடுத்தார் சுநதரம.;
மேகலா இதை உரக்க வாசிஎன்றார் சுநதரம்

மேகலா  அதில் எழுதியிருந்ததை வாசித்தாள்.

இன்றைய தினம் நடந்த இந்த குறிப்பை நான் எழுதம் போது என்மகள் மேகலாவக்கு மூன்று வயது. ஒரு காகத்தை தோட்டத்தில் கண்ட அவள் என்னைப்பார்த்து அதென்னப்பா என்று கேட்டாள். நான் காகம் என்றேன். அதே கேள்வியைக் குறைந்தது இருபது தடவைகள் திரும்பத் திரும்ப கேட்டாள். எனக்கு அவள் கேள்விகள் எரிச்சலைக் கொடுக்கவில்லை. நானும் பொறுமையாக திரும்பத் திரும்ப அவள் கேட்ட அதே கேள்விக்கு; வித்தியாசமாக காகததை பற்றி சொன்னேன் அவள் மேல் எனக்கு பாசம் அதிகரித்ததே தவிர கோபம் வரவில்லை.. ஒவ்வொரு தடவையும் அவள் கேள்வி கேட்கும் போது அவளை அணைத்து முத்கொடுத்து பதில் சொன்னேன்.

எழுதியிருந்ததை வாசித்து முடித்தவுடன் தகப்பனைப்பார்த்து மேகாலா சொன்னாள்

அப்பா அந்த சம்பவம்  நடந்தது எனக்கு நினைவில்லை:

நான நடந்தைத் தான் எழுதியிருக்கிறன். இன்று நீ வளர்ந்து, படித்து, நல்ல பதவியில் இருக்கிறாய். நான் நான்கு தடவை அதே கேள்வியைக் கேட்டதுக்கு நீ பொறுமையை இழந்து கோபத்தோடு பதில் அளிததாய். சிந்தித்து வித்தியாசமான பதிலை ஒவ்வொரு தடவையும் தருவாய் என எதிர்பார்த்தேன்”.

என்ன வித்தியாசமான பதில் அப்பா”?

இரண்டாம் தடவை கேட்டபோது இது ஒரு கறுப்பு நிறப்பறவை என்றிருக்கலாம். மூன்றாம் தடவை நான் கேட்ட போது காகங்கள் ஒற்றுமையான பறவைகள் என்றருக்கலாம்.  நான் நான்காம் தடவை கேட்ட போது காகம் சனிபகவானின் வாகனம் என்றிருக்கலாம் அல்லவா? நீ வளர்ந்த பின் பொறுமையாகச் சிந்தித்து பதில் அளிப்பாய் என எதிர்பார்த்தேன்  உன்டை பொறுமையையும், சிந்திக்கும் திறமையையும் பரிசோதிக்கவே அதே கேள்வியைத் திருப்பித் திருப்பிக் கேட்டேன் “  என்றார் சுந்தரம்.


மேகலாவின் கண்களில் கண்ணீரோடு, “அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். இனி நான் ; பொறுமையைக் கடைப்பிடிக்கிறன்என்றாள்.